|
"சிம்ரிவர்" டோக்கியோ ககிகே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சிகேகி மயமா மற்றும் அவருடைய சகாக்களால் உருவாக்கப்பட்ட சூழலை உருவகப்படுத்தும் மென்பொருள் தொகுப்பு அகும். இந்த மென்பொருளின் மூலம் பயனர்கள் மனித நடவடிக்கைகளினால் ஆற்றின் சூழலிலும், ஆற்று நீரில் வாழும் இருகலப்பாசி இனங்களின் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
|
இங்கு கொடுக்கப்பட்டுள்ள "இருகலப்பாசிகள்" காணொளிகள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி 1: இருகலப்பாசிகள்: அறிமுகமும் மாதிரிகள் சேகரிக்கும் முறையும். பகுதி 2: நுண்படப் படலம் தயாரிக்கும் முறைகள். பகுதி 3: இருகலப்பாசிகளை நுண்ணோக்கியின் மூலம் காணுதல்.
|
|
இருகலப்பாசி திட்டத்தைப் பற்றி |
நிப்பானில் உயர்நிலை பள்ளிகள் முதல் பட்டமேற்படிப்பு கல்வி நிலையங்களில் வரையுள்ள மாணவர்கள் சிம்ரிவர் நிரலை பயன்படுத்தி, சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை பெற்றுள்ளார்கள். நிப்பானில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்த உலகெங்கும் உள்ள பயனர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.
» இந்த திட்டத்தைப் பற்றி |
தளம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள் 30 ஆகஸ்ட் 2017 |
|